கொரிய யுவதியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மூன்று இலங்கையர்களை கைது செய்ய சர்வதேச பொலிஸ் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
தென்கொரியாவில் பணியாற்றுவதற்காக சென்ற இலங்கையர்கள் மூவர் 20 ஆண்டுகளுக்கு முன்னர் 1998ம் ஆண்டு செய்த கற்பழிப்பு தொடர்பாக டி என் ஏ சாட்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் தற்போது இலங்கையில் இருக்கும் குறித்த சந்தேக நபர்களை தேடி
குறித்த கொரியன் யுவதி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் அதிவேக நெடுஞ்சாலையில் கார் விபத்தில் உயிரிழந்துள்ளதாக மூன்று இலங்கையர்களும் இந்த குற்றத்தை மறைக்க முயற்சி செய்துள்ளனர்.
எனினும், கொரிய பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் உயிரிழந்த யுவதியின் உள்ளாடைகளில் இருந்த திரவத்தை கண்டுபிடித்ததுடன் டி.என்.ஏ பரிசோதனையை நடத்தியுள்ளனர்.
அதன் மூலம் குறித்த கொரியன் யுவதி கூட்டாக கற்பழிக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டதுடன் அது ஒரு கொலை என அடையாளம் கண்டு கொண்டது கொரியா பொலிஸ்.
எனினும் அந்த நேரத்தில் குற்றவாளிகள் எவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அந்நாட்டுப் பொலிஸார் விசாரணைகள் மேற்கெண்டு வந்த நிலையில்,
12 வருடங்களுக்குப் பிறகு துஸ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரின் திரவ மாதிரியுடன் கொரிய யுவதியை கற்பழித்த நபரின் திரவ மாதிரி ஒத்துப்போவதை கண்டு பிடித்துள்ளனர்.
இந்த நிலையில், பாலியல் பலாத்கார வழக்கில் சந்தேக நபர் இலங்கையர் என கொரியப் பொலிஸார் அடையாளம் காண்டுள்ளனர்.
எனினும் அவர் அடையாளம் காணப்பட்டபோது, துஸ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் கழித்து அவர் அபராதம் விதிக்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, அவர் தனது இரு நண்பர்களோடு நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.
இதுதொடர்பாக மேலும் விசாரணைகளை நடாத்திய கொரியன்
கூட்டு கற்பழிப்பு செய்தவர்களை கைது செய்ய நீதிமன்றத்தில் அனுமதி கோரியது.
அந்த அனுமதியுடன், இலங்கையில் பெண்களின் மீதான கற்பழிப்பு வழக்குகளில் ஸ்ரீலங்காவில் உள்ள சட்டம் எவ்வாறு செயற்படுகிறது என்பதை அந்த நாட்டு அதிகாரிகள் விசாரித்து அறிந்துள்ளனர்.
இதனையடுத்து,இலங்கை நீதிச் சட்டத்தின் பிரிவு 9, படி இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
0 comments:
Post a Comment