நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, October 18, 2018

துர்நாற்றம் வீசிய நிலையில் தனிமையில் இருந்தவர் சடலமாக மீட்பு!! யாழ்ப்பாணத்தில் பரபரப்பு


யாழ்.திருநெல்வேலி பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

திருநெல்வேலி கிழக்கை சேர்ந்த 48 வயதுடைய யேசுதாசன் நிமல்ராஜ் எனும் நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் திருமணம் முடிக்காத நிலையில் தனிமையில் வசித்து வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை முதல் அவரின் நடமாட்டத்தை அயலவர்கள் அவதானிக்கவில்லை.

இந்நிலையில் இந்த வீட்டில் இருந்து நேற்றைய தினம் புதன்கிழமை துர்நாற்றம் வீசியதை அடுத்து கோப்பாய் காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது. 

அந்த தகவலின் பிரகாரம் வீட்டிற்குள் சென்ற காவற்துறையினர் வீட்டினை திறந்து பார்த்த போது , சடலம் பழுதடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

அதனை அடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்த காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

0 comments:

Post a Comment