நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, October 26, 2018

அரசியல் கைதிகள் குறித்து துரிதமாக ஆராயவேண்டும்!


தமிழ் கைதிகளின் விவகாரம் குறித்து அரசு என்ற வகையில் நாம் துரிதமாக ஆராயவேண்டும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தமிழ் கைதிகளின் விவகாரம் குறித்து அரசு என்ற வகையில் நாம் வழக்குகளைத் துரிதப்படுத்தித் தீர்வுகள் குறித்து ஆராயவேண்டும்.

எனினும் ஜனாதிபதி – பிரதமர் இருவரும் இந்த விடயம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். கடும் குற்றம் இளைத்தவர்கள் யார்? நிரபராதிகள் யார்? என ஆராய வேண்டும், இயலுமானவரை வழக்குகளைத் துரிதப்படுத்தி விடுதலை குறித்து ஆராயவேண்டும்.

இவர்கள் நீண்ட காலமாகச் சிறையில் வாடுகின்றனர் என நானும் ஏற்றுக் கொள்கின்றேன். யாரை விடுதலை செய்ய முடியுமோ அவர்களை விடுதலை செய்ய வேண்டும்” – என்றார்.

0 comments:

Post a Comment