நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, October 26, 2018

மாங்காய் திருடிக்கு 30ஆம் திகதி தீர்ப்பு



மாங்காய் திருடிக்கு 30ஆம் திகதி தீர்ப்பு
அயல் வீட்டுத் தோட்டத்திலிருந்து 19 மாங்காய்களைத் திருடிய வயோதிபப் பெண்ணை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அநுராதபுரம், சாலியபுர ஜயந்தி கிராமத்தைச் சேர்ந்த லலிதா ஆனந்த என்ற பெண்ணே, தன்மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை ஒத்துக்கொண்டார்.

தண்டனையை அறிவிப்பதற்காக, வழக்கை, எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலும் ஒத்திவைத்த அநுராதபுரம் நீதவான் ஜானக சமரதுங்க, அன்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு, வயோதிபப் பெண்ணுக்குக் உத்தரவிட்டார்.

தன்னுடைய வீட்டுத்தோட்டத்திலிருந்து 19 மாங்காய்களை, மேற்படி வயோதிபப் பெண் திருடிவிட்டாரென, அயல்வீட்டுப் பெண், அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

சந்தேகநபரான மேற்படி வயோதிபப் பெண், இதற்கு முன்னரும், மாங்காய்களைத் திருடிய குற்றச்சாட்டுகளுக்காக, கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்

0 comments:

Post a Comment