நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, October 26, 2018

விக்னேஷ்வரன் புதிய கட்சியை ஆரம்பித்ததற்கு இதுதான் காரணம்


இனவாதத்தை தூண்டும் நோக்கில் முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரன் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளதாக இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

விக்னேஸ்வரன் இனவாதத்தை தூண்ட முயற்சிப்பதாகவும் அதனை தன்னால் எச்சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

பேலியகொடவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும்அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்ப்பில் கட்சியின் தலைவரே போட்டியிட வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாவிடின் அவரினால் வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாமரை மொட்டில் உள்ள சில சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர்களை தான் மதிப்பதாகவும் அவர்கள் அந்த கட்சியில் இருந்து விலகி தன்னுடைய கட்சிக்கு வந்தால் உயர்ந்த மரியாதையுடன் அவர்களை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேர்வின் சில்வா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அவராலட 3 வாக்குளையேனும் பெற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment