போர்ச்சுகல் பகுதியில் கடலுக்கடியில் சுமார் 400 வருடங்கள் பழைமையான கப்பலின் உடைந்த பாகங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பான் கடற்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது இதைக் கண்டுள்ளனர்.
இதுகுறித்து
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “செப்டம்பர் முதல் வாரத்தில் லிஸ்பான்( Lisbon) பகுதியின் மீன்பிடிப் பகுதிகளில் இந்தக் கப்பல் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து நீர்மூழ்கி வீரர்களை கொண்டு இப்பகுதியில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து உடைந்த கப்பலின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1575 – 1625 காலகட்டத்தில் இந்தக் கப்பல் நீரில் மூழ்கி இருக்கலாம். இந்தக் கப்பலின் பெயர் தெரியவில்லை. அந்தக் காலத்தில் போர்ச்சுகல், இந்தியா மற்றும் ஆசிய நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தது.
இந்தக்
கப்பல் கடலுக்கடியில் 40 அடி நீளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 100 மீட்டர் நீளம், 500 மீற்றர்அகலம் கொண்டது.
இதில் 9 பீரங்கிகள், போர்ச்சுகீசிய ஆயுதங்கள், சீனப் பீங்கான்கள், சில நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அடிமைகளை விலைக்கு வாங்க இந்த நாணயங்கள் பயன்படுத்தி இருக்கலாம். இது போர்ச்சுகல் தொல்பொருள் ஆராய்ச்சியில் முக்கியமான கண்டுபிடிப்பாகும்”என்றனர்.
0 comments:
Post a Comment