சிங்கள இராணுவத்தினர் பேய்கள் என்றே நாம் கருதியிருந்தோம். எனினும் எமக்கு புனர்வாழ்வளிக்கும் போதுதான் அறிந்துகொண்டோம்
புற்றுநோயால் பீடிக்கப்பட்டு மரணித்த விடுதலை புலிகள் அமைப்பின் பெண்கள் அமைப்பின் தலைவி தமிழினி அவர் உயிருடன் இருக்கும்போது நூல் ஒன்றை எழுதியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ள விடங்களை நோக்கும் போது இராணுவத்தினர் யுத்தக் குற்றம் புரியவில்லை என்பது புலனாகிறது என சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்தார்.
“தாய் நாட்டுக்காக இராணுவத்தினர்” அமைப்பு ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பு ஸ்ரீவஜிராஷர்ம பௌத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் புலிகள் அமைப்பின் பெண்களின் தலைவி தமிழினி அவர் உயிருடன் இருக்கும்போது நூல்
அதில் “சிங்கள இராணுவத்தினர் பேய்கள் என்றே நாம் கருதியிருந்தோம். எனினும் எமக்கு புனர்வாழ்வளிக்கும் போதுதான் அறிந்துகொண்டோம் அவர்களும் மனிதர்கள் என்று. இறுதிகட்ட யுத்தத்தின்போது தப்பிச்செல்ல முற்பட்ட தமிழ் மக்களை சுடுமாறு பணிப்புரை கிடைத்தது.
அதன் பிரகாரம் சுட்டதாகவும்” அந்நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே அந்த நூலே சிறந்த ஆதாரமாக உள்ளது என்றார்.
0 comments:
Post a Comment