மூவின
மக்கள் வாழும் இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அங்குள்ள மக்கள் சமாதானத்துடன் – ஒற்றுமையுடன் வாழ வேண்டும். மீண்டுமொரு போர் அங்கு மூள இடமளிக்கக்கூடாது. இலங்கை மக்களின் அகதி வாழ்க்கைக்கு முடிவுகட்டப்பட வேண்டும். கனடாவின் இந்த எதிர்பார்ப்புகள் – விருப்பங்கள் நிறைவேற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் தெரிவித்தார் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ.
ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது பொதுச்சபைக் கூட்டத் தொடருக்கு சமாந்தரமாக இடம்பெறும் நெல்சன் மண்டேலா சமாதான மாநாடானது அனைத்து அரச தலைவர்களின் பங்குபற்றலுடன் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேற்று ஆரம்பமானது.
இந்த மாநாட்டில் பங்குபற்றியுள்ள இலங்கை ஜனாதிபதியை கனேடியப் பிரதமர் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
0 comments:
Post a Comment