கிளிநொச்சியில் துணிச்சல் மிக்க இளைஞர்களின் செயற்பாடு குறித்து பொலிஸார் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
நேற்றையதினம் இளைஞர் குழுவொன்றின் அதிரடி செயற்பாடு காரணமாக, சட்டவிரோத செயற்பாடு ஒன்று தடுக்கப்பட்டிருந்தது.
சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த லொறி ஒன்றை விரட்டிபிடித்த இளைஞர்கள் அதனை பொலிஸாரிடம் ஒப்படைந்துள்ளனர்.
கிளிநொச்சி,
இந்நிலையில் லொறியில் கொண்டு சென்ற கஞ்சா தொகையை கைப்பற்ற உதவிய இளைஞர்களுக்கு பொலிஸார் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அதிக வேகத்துடன் பயணித்த சிறிய லொறி ஒன்று தொடர்பில் சந்தேகமடைந்த இளைஞர்கள், அந்த லொறியின் பின்னால் துறத்தி சென்றுள்ளனர். அந்த சந்தர்ப்பத்தில் குறித்த லொறி கிளிநொச்சி மலையாலபுரம் பிரதேசத்தின் குறுக்கு வீதியின் ஊடாக பயணித்துள்ளது.
எனினும் தொடர்ந்து இளைஞர்கள் துறத்தி சென்ற போது, சந்தேக நபர்கள் லொறியில் இருந்து பொதியை அந்தப் பகுதியில் வீசியுள்ளனர். லொறியையும் அவ்விடத்திலேயே நிறுத்தி விட்டு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் உடனடியாக கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல்
சம்பவ இடத்திற்கு வந்து சோதனையிட்ட பொலிஸார் 6 கிலோ கிராம் கஞ்சாவை மீட்டுள்ளதுடன், லொரியையும் மீட்டனர்.
குறித்த இளைஞர்களின் அவதானம் காரணமாக சட்டவிரோத நடவடிக்கை தடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் சந்தேக நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
0 comments:
Post a Comment