பிறந்த உடன் என் பரிசம் தொட்டு மருத்துவர்கள் அவர் கையில் கொடுக்கையில் பெண் பிள்ளை என தெரிந்ததும் தன் ராஜங்கத்திர்க்கு ஒரு இளவரசி கிடைத்து விட்டால் என பெருமையுடன் தூக்கியவர் எனக்கு உயிர் அளித்த என் அப்பா. தனக்கு பெண் பிள்ளையை கொடுத்ததற்காக மருத்தமனையில் அனைவர்க்கும் இனிப்பு வழங்கி பெருமை பட்டதாய் என் அம்மா சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன். எதோ அவர் அம்மா பிறந்து விட்டதாக ஊர் முழுக்க சொல்வார் இன்னும்.
எத்தனை நாள் தவமோ அவரை நான் அப்பாவாக பெற 5 வயது வரை தோளிலும் மாரிலும் போட்டு வளத்த என் தகப்பன் நான் அழுவேன் என்று தூக்காமல் கடந்த இரவுகள் பல. கேட்டதெல்லாம் கிடைக்கும். யானை சவாரி முதல் இரவு தூங்கும் வரை அவர் நிழலே எனக்கு நிதர்சனம் .
6- ஆம்
புதிது புதிதாய் பூத்த பட்டாம்பூச்சி கூடத்தில் நானும் ஒரு பறவை போல் பள்ளி சென்று வீடு திரும்பையில் அவரது புல்லட்டு சத்தத்துடன் என் அந்த நாள் கதையையும் கூறுகையில் அதே ஆச்சர்யத்துடன் கேட்கும் என் அப்பா?
நாட்களும் கடந்தன அவரின் உயரத்தையும் எட்டி விட்டேன் உடலிலும் மாற்றங்கள் அம்மாவிடம் கேட்டல் பருவத்தை எட்டி விட்டாய் என கூறினால் எனக்கு அதெலாம் ஒன்றும் தெரியாது என்று அப்பா வந்த உடன் இருவரும் விளையாட சென்று விடுவோம். அதனை கனத்துடனும் என்னை தூக்கி வருவார் வீட்டிற்கு.
என்
இப்படியே இருந்த நாட்கள் மாறும் என நான் கனவிலும் நினைக்க வில்லை . பள்ளி முடித்து வீடு வரும்போது திடிரென வாயிற்று வலி வீட்டுக்கு சென்ற உடன் என் புள்ள பருவம் அடைந்து விட்டால் என அம்மா சொந்தங்களுகேல்லாம் சொல்லி கொண்டு இருந்தார் அப்பாவும் மகிழ்ச்சி அடைந்தார். அன்றிலிருந்து உடலில் மாற்றங்கள். ஏனோ அம்மாவிடம் நேரத்தை செலவளிக்காத நான் அம்மாவிடமே சிலவற்றை பகிர்ந்து கொள்ள எண்ணினேன்.
வேறு ஆண்களின் பார்வைகளுக்கு அர்த்தம் புரிந்தது . எனக்குள் நடக்கும் மாற்றத்தை புரிந்து கொண்டேன் . எப்பொழுதும் அப்பாவின் மார்பில் உறங்கும் எனக்கு இனி இடமில்லாமல் போனது. அம்மாவின் அதட்டல்கள் அதிகரித்தது. எப்பொழுதும் எனக்கு நிழலாய் இருக்கும் என் அப்பாவிற்கு என அறையில் இனி இடமில்லை!!!!!
0 comments:
Post a Comment