அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துவருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் வாகன இறக்குமதிகளுக்கு அராசங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
நிதியமைச்சினால் இன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இது தொடர்பான தகல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படுகின்ற வாகன இறக்குமதி சலுகை பத்திரங்கள் இன்று நள்ளிரவு
அத்துடன், அரச திணைக்களங்கள், அமைச்சுக்கள், மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுக்காக இறக்குமதி செய்யவிருந்த, வாகனங்களை மறுஅறிவித்தல் வரை நிறுத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட சலுகை பத்திரங்களை பயன்படுத்தி வாகனங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கை 6 மாதகாலத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அந்த வாகனங்களுக்கான கடன் உறுதி கடிதம் வழங்கும் நடவடிக்கையும் இடம்பெறாது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய தீர்மானத்திற்கு அமைய ஹைபிரிட் எனும் கலப்பு வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான கடன் பெறுகையின் போது,
இதன்படி குறித்த வாகனங்களின் விலைபெறுமதியில் 50% முன்வைப்பு பணமாக வழங்கப்பட்டு எஞ்சிய தொகையே கடன் அடிப்படையில் மற்றப்பட வேண்டும்.
பேருந்து, பாரவூர்தி மற்றும் காவு வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து வாகனங்களுக்கும் கடன் உறுதிப்பத்திரம் திறக்கப்படுகின்ற போது 200 சதவீத உச்சபட்ச வைப்பு செய்யபடவேண்டும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், திறன்பேசிகள், குளிர்சாதன பெட்டிகள், தொலைக்காட்சி, வாசனை பூச்சிக்கள், சலவை இயந்திரம், காலணிகள் மற்றும் வாகன டயர் போன்றவற்றின் இறக்குமதிக்கு 100 சதவீத உச்சபட்ச வைப்பொன்று செய்யப்படவேண்டும் என நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
0 comments:
Post a Comment