நேற்று இந்தோனேசிஷியாவில் ஏற்பட்ட சுனாமி பேரலைகள், இலங்கையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என வளிமண்டலியல் திணைக்கள வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்துள்ளார்.
எனினும் பாணந்துறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக காலி மற்றும் மாத்தறை கரையை அண்மித்த கடலலைகள் 2 தொடக்கம் 2.5 மீற்றர் உயரத்திற்கு மேலெழும். எனினும் அலைகள் கரையை அண்மித்த பிரதேசங்களுக்குள் பிரவேசிக்காது என திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது
மலையகப் பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் சாத்தியம் உள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இந்தோனேஷியாவில் நேற்று ஏற்பட்ட சுனாமி பேரலைகள் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment