நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, September 26, 2018

வங்கி கடனில் மகிழூந்து.. ராஜா போல பார்த்தவளை பாடை கட்டி அனுப்பினானோ..




அடி தங்கச்சி,

உன் பூர்வீகம் அறிந்தேன்
உன் வரலாறு தெரிந்தேன்
பஞ்சுமிட்டாய் விற்கும் அப்பன்
கூலிவேலை செய்யும் ஆத்தாள்…!!!

அன்றாடச் சோற்றுக்கே மன்றாடி
ஆசைகள் அனைத்தையும் அடக்கி
பல்கலைக்கழகம் நீ செல்ல – தம்மை
கசக்கி உருக்கிய பெற்றோர்கள்…!!!

நீ படித்த படிப்பும், பார்த்த வேலையும்
   
       
   
  தற்கொலைகளை தடுப்பதல்லவோ ?
மாறாய்,
உன் மரணம் தற்கொலை என்பது
யாரோ சிலர் தப்பிக்க திசைதிருப்பெல்லவோ ??

தலைப்பிள்ளை அடிவயிற்றை நிரப்ப
தடவிக்கொடுக்கும் தாய்மையது
கடலை நோக்கி ஓடுவதென்பது
முரண்களின் கூட்டு அல்லவோ ???

காதல் கவிதையொன்று உனக்கெழுதி
காணொளியாய் வலைத்தளம் சேர்த்த
ஆருயிர்க் கணவனை – உன்
கடைசி ஊர்வலத்தில் காணவில்லையே
ஏனம்மா ???

தனக்கொரு மகன் பிறப்பான்
“கரிகாலன்” என்று பெயர் வைப்பேன்
தேசியமே எனது உயிர்த்துடிப்பு என்றவன்
கட்டியவளின் கடைசிப் பயணத்தில்
கண்ணியம் தவறியது ஏனம்மா ???

அவன் கடந்த காலம் அறிந்தவர்கள்
கடுமையாக விமர்சிக்க
கண்டும் காணாததாய் அவன்
வாய்மூடி இருப்பது கேவலமெல்லவோ ???

உன் பெயரில், வங்கிக் கடனில்
மகிழூந்து வாங்கி கொடுத்தாயாமே
கர்ப்பிணி மனைவியை கைத்தாங்கலாய்
ஓடிவந்து ஏற்றிச் செல்லாதது ஏனம்மா ???

இரண்டு நாட்கள் உன் தொடர்பில்லை
இதயத்துடிப்பே அடங்கியிருக்க வேண்டியவன்
உன் இறந்த செய்தி கேட்டவுடன்
தற்கொலை இல்லை கொலை என்றானாமே
காரணம் ஏனென்று தெரியாமலா ???

மேடையில் வீரமாய் தேசியம் முழங்கியதால்
அரசாங்கம் செய்த பழிவாங்கல் என்றானாம்
இதுவே இந்த ஆண்டின் உச்ச நகைச்சுவை
அரசு பழிவாங்க அடுத்தவரை ஏன் தேடுது ??

நாளை ஒரு கதை வரலாம் – உன்
கர்ப்பத்திற்கும் அவன் களங்கம் தரலாம்
ஏழை உன் வீட்டாரால் என்ன செய்ய முடியும் என்று
என்னவென்றாலும் எடுத்து விடலாம்…!!!

அன்றொரு நாள் அர்த்த சாமத்தில்
பெண்ணொருத்தி எனைத் தொடர்புகொண்டு
உன்னவனின் உச்ச நாடகத்தை
கண்ணீருடன் சொல்லி நின்றாள்
அவள் போல் பலரின் சாபத்தால் தானோ
   
       
   
  அழகே இந்நிலை உனக்கு வந்தது…!!!

நீதி கேட்டுப் போராடியிருக்க வேண்டியவள்
எப்படி மரணித்தாய் என்பதையே
எவருக்கும் சொல்லாமல் சென்றாயே…
வீரவணக்கம் செலுத்தும் தேசத்தில்
“கோழை வணக்கம்” தந்து சென்றாயோ ???

உனக்கான நீதியை நீ தேடவில்லை
அதற்காக நாமும் வாய்மூட மாட்டோம்
உனக்கான நீதியை நாம் விடப்போவதில்லை
உன் ஆத்மா சாந்தியடைய வேண்டின்,
உனக்கான நீதியை நாம் பெற்றுத்தருவோம்…!!!

அதுவரை நீ அமைதியின்றித் தூங்கு…!!!

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job