தமிழ் இன உணர்வாளர் தோழர் முகிலன் ஒரு வருட சிறைவாசத்தின் பின் ஜாமீனில் விடுதலை பெற்றுள்ளார்.
மதுரை சிறையில் இருந்து விடுதலை பெற்றுள்ள தோழர் முகிலன் சிறைவாசலிலேயே திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதுமட்டுமன்றி ஏழு தமிழர் விடுதலைக்கும் மக்களை திரட்டி குரல் கொடுக்கப்போவதாக கூறியுள்ளார்.
ஆனால் முருகனின் தாயார் நேரில் சென்று கேட்டிருந்தும்கூட சம்பந்தர் அய்யா இதுவரை
ஏழு தமிழர் விடுதலைக்கு குரல் கொடுக்கவில்லை.
சாந்தனின் தாயார் தான் இறப்பதற்கு முன் தன் மகனை பார்க்க விரும்புவதாக கெஞ்சிக் கேட்டிருக்கிறார்.
ஆனால் சம்பந்தர் அய்யா மனம் இரங்கவில்லை. 27 வருட சிறைவாசத்தின் பின்னரும்கூட அவர்களை விடுதலை செய்யும்படி கோர அவர் தயாரில்லை.
திலீபனுக்கு அஞ்சலி செலுத்த போட்டி போடும் சுமந்திரனும் இந்த எழுவர் விடுதலைக்கு இதுவரை குரல் கொடுக்கவில்லை.
இந்த ஏழு தமிழரை தமிழக அரசு விடுதலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த ஏழு தமிழரை விடுதலை செய்யும் தீர்மானத்தை தமிழக அரசு ஆளுனருக்கு அனுப்பியுள்ளது.
ஆளுநர் விரைந்து முடிவை அறிவிக்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் மற்றும் தமிழ் இன உணர்வாளர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இத்தனைக்கு பிறகும்கூட எமது சம்பந்தர் அய்யா இந்த ஏழு தமிழர் விடுதலைக்கு குரல் கொடுக்க மறுக்கிறார் எனில் என்ன அர்த்தம்?
இந்த ஏழு தமிழரில் நான்குபேர் ஈழத் தமிழர்கள்.
எனவே ஈழத் தமிழ் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டியது கடமையாகும்.
ஆனால் தமிழக தமிழரான தோழர் முகிலனுக்கு இருக்கும் உணர்வுகூட எமது தலைவரான சம்பந்தர் அய்யாவுக்கு இல்லை என்பது வேதனையாக இருக்கிறது.
0 comments:
Post a Comment