நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, September 20, 2018

காட்டுப் பன்றிகளை வேட்டையாடுவதற்கு இனி தடையில்லை




காட்டுப் பன்றிகளை வேட்டையாடுவதற்கு இனி தடையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில்

   
       
   
  பாதுகாக்கப்பட வேண்டிய, அருகி வரும் விலங்கினங்களில் ஒன்றாக காட்டுப் பன்றிகள் கருதப்பட்டன.

எனவே காட்டுப் பன்றிகளை வேட்டையாடுவதற்கோ அல்லது கொல்வதற்கோ சட்ட ரீதியாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும், விவசாய செய்கைக்கு மிகவும் அதிகளவில் பாதிப்பினை ஏற்படுத்தும் விலங்கினமாக தற்பொழுது காட்டுப் பன்றிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

விவசாய

   
       
   
  அமைச்சினால் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் காட்டுப் பன்றிகளினால் விவசாய செய்கைகளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் பற்றி கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பாதிப்பை தடுத்து நிறுத்தும் நோக்கில் காட்டுப் பன்றிகளை வேட்டையாடுவதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் குறித்த அதிகாரப்பூர்வ அமைச்சரவை பத்திரம் எதிர்வரும் வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக விவசாய அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment