நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, September 26, 2018

நாமல் குமாரவிடம் 7 மணித்தியாலம் வாக்குமூலம்


குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமாரவிடம் 7 மணித்தியாலம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

நேற்று காலை 9 மணிக்கு அங்கு பிரசன்னமான அவர், அரசாங்க இரசாயன பகுப்பாய்வகத்திற்கு வழங்குவதற்கான குரல் மாதிரியை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவரிடம்

   
       
   
  வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் மேற்கொண்டனர்.

சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடர்பில் நாமல் குமாரைவை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலைப்படுத்தி, அவரின் குரல் மாதிரி ஒன்றைப் பெற்றுக்கொள்ள கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரட்னவிடம், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் அனுமதியை பெற்றுக்கொண்டனர்.

அதன்படி, நேற்றைய தினம் நாமல் குமாரவின் குரல் மாதிரி பெறப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கொலை முயற்சி தொடர்பில் தகவல் வெளியிட்ட நாமல் குமார முன்னாள் பாதுகாப்பு செயலாளரை வரகாபொல பிரதேசத்திலுள்ள விகாரை ஒன்றில் நிகழ்வொன்றில் கலந்து கொள்ள செய்ய கடும் முயற்சிகளை தேற்கொண்டதாக தகவல்கள தெரிவிக்கின்றன.

வரகாலபொல பிரதேச அரசியல்வாதி ஒருவரின் ஊடாக அவர் இந்த முயற்சியை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமல் குமாரவின் இந்த கோரிக்கை பிரதேச அரசியல்வாதியினால் கேகாலை பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்றிணைந்த எதிரணியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும் அதற்கு அவர் உரிய பதிலை அளிக்கவில்லை.

இது தொடர்பில் பிரதேச அரசியல்வாதியிடம் பல தடவைகள் கடும் கோரிக்கையை முன்வைத்த நாமல்குமார, தமது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அழைத்து குறித்த நிகழ்வை நடத்துவதாக கூறியுள்ளார்.

நாமல் குமார இந்த முயற்சியை கடந்த 3 அல்லது மூன்றரை மாதங்களுக்கு முன்னர் மேற்கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும்

   
       
   
  அவரது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்யும் சூழ்ச்சியில் தொடர்புடையதாக கூறப்படும் இந்திய பிரஜை மனநலம் பாதிக்கப்பட்டவர் என இந்திய உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் எமது செய்தி சேவை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகத்திடம் வினவிய போது அதன் பேச்சாளர் ஒருவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

சில அரச தலைவர்களுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தலை கருத்திற் கொண்டு விசாரணைகளை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளர்.

குறித்த இந்திய பிரஜை 2000ஆம் ஆண்டு முதல் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job