இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி இரண்டு வாரங்களில் சென்னையிலிருந்து விமானங்களை அனுப்பி கொழும்பை தரைமட்டமாக்க விடுதலைப்புலிகள் திட்டமிட்டனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நியுயோர்க்கில் வாழும் இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் சென்னையிலிருந்தோ அல்லது வேறு ஏதோவொரு காட்டுப்பகுதியில் இருந்தோ கொழும்பின் மீது விமானதாக்குதலை
மேற்கொண்டு கொழும்பை அழிக்க திட்டமிட்டிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விமான தாக்குதல் குறித்த அச்சம் காரணமாக அனைவரும் நாட்டை விட்டு தப்பியோடிவிட்டனர் என தெரிவித்துள்ள சிறிசேன அவ்வேளை நான் பிரதி பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றினேன் எனவும் தெரிவித்துள்ளார்.
நானும்கூட அவ்வேளை கொழும்பில் தங்கியிருக்கவில்லை கொழும்பிற்கு வெளியே பல இடங்களில் தங்கியிருந்தேன் கொழும்பு அவ்வேளை பாதுகாப்பற்றதாக விளங்கியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதி யுத்தத்தை நடத்தியவன் நானே அவ்வேளை ஏனைய அனைத்து தலைவர்களும் ஓடி ஒளித்துக்கொண்டவேளை நானேயுத்தத்தை முன்னெடுத்தேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment