நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, September 27, 2018

மதம் மாற்றும் முயற்சியா, மாணவனின் உயிரிழப்புக்கு காரணம்?





இரத்தினபுரி - இறக்குவானை பகுதியிலுள்ள தமிழ் பாடசாலையொன்றின் மாணவன் ஒருவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில், குறித்த மாணவனின் சடலம் புதன்கிழமை (26) மாலை
   
       
   
  கண்டெடுக்கப்பட்டிருந்தது. 

இறக்குவானை ஒரஞ்பீல்ட் பிரதேசத்தை சேர்ந்த 13 வயது மாணவனே இவ்வாறு மர்மமாக உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையே இந்த உயிரிழப்பிற்கான காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

எனினும், மத மாற்றம் தொடர்பில் எழுந்த பிரச்சனையே இந்த உயிரிழப்பிற்கான காரணம் என பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 

தன்னை மதம் மாறுமாறு தொடர்ச்சியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக குறித்த மாணவன் பாடசாலை நிர்வாகத்திற்கு ஏற்கனவே அறிவித்திருந்ததாக, பாடசாலை நிர்வாகத்தினர் காவல்துறைக்கு வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மாணவனின் அறிவித்தலை அடுத்து,
   
       
   
  பாடசாலை நிர்வாகத்தினர் இந்த விடயம் தொடர்பில் மாணவனின் குடும்பத்தினருக்கு அறிவுறுத்தியிருந்ததாகவும் பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 

இந்த நிலையிலேயே மாணவனின் மர்மமாக உயிரிழந்துள்ளதாகவும் பாடசாலை நிர்வாகத்தினர் சுட்டிக்காட்டுகின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பில் தாம் விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

- நன்றி கெப்பிட்டல் நியூஸ் 

0 comments:

Post a Comment