தியாக தீபம் திலீபனின் நினைவு வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற இரத்த தான முகாமில் இராணுவ புலனாய்வு துறையை சார்ந்த ஒருவர் இரத்த தானம் வழங்கியுள்ளார். யாழ்.இந்துக்
கல்லூரியில் இன்றைய தினம் குறித்த இரத்த தான முகாம் நடைபெற்றது.
அதன் போது இரத்த தான முகாம் நடைபெறும் மண்டபத்திற்கு சென்றிருந்த இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்த இருவர் அங்கு எதற்காக இரத்த தான முகாம் நடைபெறுவதாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதன் போது அங்கிருந்தவர்கள் தியாக தீபம் திலீபனின் நினைவு வாரத்தை முன்னிட்டு இரத்த தானம் நடத்தப்படுவதாக கூறியுள்ளனர். அதனை அடுத்து இருவரில் ஒருவர் தனது இடுப்பு பகுதியில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து தன்னுடன் வந்தவரிடம் கையளித்து விட்டு தானும் இரத்த தானம் வழங்க முன் வந்தார்.
அதனை அடுத்து
மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் போது அவர் இரத்த தானம் வழங்க தகுதியுடையவர் என மருத்துவர் பரிந்துரைத்ததன் பின்னர் அவர் இரத்த தானம் வழங்கினார்.
குறித்த இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்த நபரின் செயற்பாடு அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும் , குறித்த புலனாய்வு பிரிவு உத்தியோகஸ்தருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர் என தெரிவிக்கப்படுகின்றது
0 comments:
Post a Comment