எதிர்வரும் வடமாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் புதியவர் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கு
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாப்பை மீறிவிட்டார். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி விட்டார்.
அத்துடன், மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி மக்களின் நலன்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். எனினும், ஆளுனரின் கையில் இன்னமும் நிதி உள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் வடமாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் புதியவர் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக” அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, வடமாகாண முதலமைச்சருக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான கருத்து மோதல் அண்மை காலமாக வலுவடைந்துள்ளது. இரண்டு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை
இதனால் வடமாகாண முதலமைச்சர், தனித்து அல்லது புதிய கூட்டணி ஒன்றில் ஊடாக தேர்தலில் போட்டியிட கூடிய வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வருகின்றது.
மேலும், எதிர்வரும் வடமாகாண சபை தேர்தலில் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கு கூட்டமைப்பின் ஒரு தரப்பினர் எதிர்ப்பு வெளியிட்டு வருவதுடன், ஒரு தரப்பு முதலமைச்சருக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றது.
இந்நிலையிலேயே, எதிர்வரும் வடமாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் புதியவர் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment