நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, September 26, 2018

எரிபொருள்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கும்?


உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளதாக உலக பொருளாதார தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி, ஒரு பீப்பா மசகு எண்ணெய் 81.20 டொலர்களாக அதிகரித்துள்ளது. டபிள்யு. ரி.ஐ. ரக ஒரு பீப்பா மசகு எண்ணெய் 72.08 டொலர்களாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் பின்னர் முதல் தடவையாக மசகு எண்ணெய் இவ்வாறு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அறிமுகம் செய்துள்ள புதிய சூத்திரத்தின் படி எதிர்வரும் 10 ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிப்பதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதாக ஏற்கனவே பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment