1- இறுதியாக பயணித்த ஆட்டோ சாரதியின் வாக்குமூலம் எங்கே?
2- கடற்கரைக்கு எத்தனை மணிக்கு அவர் சென்றிருக்ககூடம்? கடலில் இறங்கிய இடத்திற்கும் சடலம் ஒதுங்கிய இடத்திற்குமான தூர மாற்றம் என்ன?
3- மக்கள் நடமாட்டம் உள்ள கடற்கரையா? அங்கே மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்ட கடற்பிரதேசம் ஒன்று இருந்ததாகவும் அறிமுடிகிறது? இது இவருக்கு பரீட்சயமான கடற்கரையா?
4- குறிப்பாக இறந்தவரின் அன்றைய அல்லது முதல் நாளைய மனநிலை, மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக நெருங்கிய எவரினதும் வாக்குமூலம் இல்லையா?
5- அவருடைய கைப்பையும், காலணியும் எங்கே எப்படி கண்டெடுக்கப்பட்டது? (வீசியெறியப்பட்டிருந்ததா? முறையாக வைக்கப்பட்டிருந்ததா?) பையினுள் என்ன இருந்தது? குறிப்புகள் ஏதும்?
6- கைபேசி எங்கே? இறுதியாக யாரிடம் பேசியுள்ளார்? கணவரிடம் இருந்தான குறும் செய்திகள்?
அதிலே அவர்கள் பரிமாறிக்கொண்டிருக்க கூடிய மேலதிக விடயங்கள் ஏதும்?
7- பெண்கள் பயன்படுத்தும் கைப்பையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், அதனுள் இவர் சம்பத்தப்பட்ட ஆவணம் இருந்ததாகவும் சொல்லப்பட்ட செய்தி அப்படியே அற்று போனது ஏன்?
8- ஏற்கனவே பதிவு திருமணம் செய்த செந்தூரன் அதற்கான மணவிலக்கு பெற்றாரா? அல்லது அதனை மறைத்தா அடுத்த திருமணம் செய்தார்?
9- ஏன் ஆரம்பத்தில் கணவனுடைய பெயர் முதற் பெயராக இல்லாமல் தகப்பனுடைய பெயர் முதற் பெயராக வந்தது?
10- விரிவுரையாளராக கடமையாற்றி கொண்டிருக்ககூடிய ஒருவர் ஏற்கனவே கல்விசமூகத்தினூடே தொடர் பயணத்தை கொண்டிருந்தவர். இவருக்கு நிச்சயம் ஒருவராவது மிக நெருங்கிய நண்பராக இருந்திருக்க முடியம்? அப்படியானவரிடம் முக்கியமான விடயங்கள் பகிரப்பட்டிருக்கலாம். அவை எங்கே?
11- மரணசடங்கில் கலந்து கொள்ளாத செந்தூரனின் படைப்புகளை அவரின் பூதவுடல்மீது வைத்தது யார்?
* வெறுமனே முகநூல் செய்திகளையே ஊடகங்கள் மெருகூட்டியும், மறுபடியும், மறுபடியும் பிரசுரிப்பதன் நோக்கம் என்ன? செந்தூரன் தவறானவர் என்பதும் அவரிடம் எழுப்பப்பட வேண்டிய கேள்விகள் தராளமாக சமூகவலைத்தளங்களில் உலாவுவதையும் காணமுடிகிறது? ஆனால் இதுவிடயத்திலும் இன்னமும் செந்தூரனிடம் வாக்குமூலத்தை எவரும் பெற்று வெளியிட்டதாக இல்லை. அவரால் பாதிக்கப்பட்ட எவரினதும் நேரடி வெளிப்படுத்தல்களோ, எழுத்துமூல வெளிப்படுத்தல்களோ இன்னமும் இல்லை. இங்கே உலகம் புரியாத அப்பாவிகளாக செந்தூரனிடம் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இல்லை. அப்படியிருக்க ஒரு ஆணைபற்றிய சரியான மதிப்பீடு செய்யாமல் பல பெண்கள் ஏன் இவரிடத்தில் வீழ்ந்தார்கள்?
மொத்தத்தில் ஒரு விவேகமான சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய விரிவுரையாளரின் மரணத்தில் உள்ள மர்மங்களை துலக்கும் நோக்கிலான செயற்பாடுகளைவிட இங்கே சில அதிமேதாவிகளில் கருத்தேற்றங்களும், இந்த விடயத்தை பயன்படுத்தி தம்மை பிரபலப்படுத்தி கொள்ளும் வகையிலான நிறுவல்களும் மட்டுமே நிகழ்தேறுகிறது. இவர்களிடம் இறந்தவருக்கான உண்மையான அனுதாபமும் கிடையாது, சுய ஒழுக்கமுள்ள சமூகமாக நாம் மிளிரவேண்டும் என்கிற எண்ணமும் கிடையாது.
"அறியாமை ஆர்ப்பரிக்கும் உலகமிது
இருந்தாலும் அறிவு அயராது"
0 comments:
Post a Comment