வாழ்ந்தால் அவரோடு தான் வாழ்வேன், எங்களை பிரித்து விடாதீர்கள்”என்று ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரை திருமணம் செய்த இளம்பெண் பஞ்சாப் பொலிசில் கெஞ்சி அழுதுள்ளார்.பஞ்சாப் மாநிலத்தில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணன். 65 வயதான இவர் மனைவியை இழந்தவர். இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியராக இருந்தாலும் வீட்டில் பிள்ளைகளுக்கு டியூஷன் சொல்லி கொடுத்து கொண்டுவந்தார். அப்போது மகத் என்ற 20 வயது பெண் ஜெய்கிருஷ்ணனிடம் டியூஷன் படிக்க வந்தார்.
மகத்தை தலைமை ஆசிரியருக்கு மிகவும் பிடித்துபோய்விட்டதால், நிறைய உதவிகளை செய்திருக்கிறார். இந்த குணம் மகத்தை ஈர்த்தது, அவர் மீது அதிகப்படியான பாசமும் ஏற்பட்டது. இது இருவருக்குள்ளும் காதலாக உருவானது. பின்னர் திருமணம் செய்ய முடிவெடுத்தார்கள். பெண் வீட்டில் எப்படியும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் வீட்டை விட்டு ஓடிப்போய் ஒரு வருடத்திற்கு முன்பு ரிஜிஸ்டர் கல்யாணமும் செய்து கொண்டனர்.
இதற்கு நடுவில் பெண்ணை காணோம் என்று மகத் பெற்றோர் பஞ்சாப் பொலிசில் புகார் அளித்தனர்.
அப்போது அவர்களை பிடித்த பொலிசார் பெற்றோருக்கும் தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்தனர்.மேலும் பொலிசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது, ஏற்கனவே நடைபெற்ற பதிவு திருமணத்தை பற்றி இருவரும் சொன்னார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த மகத்தின் தந்தை, தன்னுடன் வந்துவிடுமாறு கதறினார்.
அதற்கு மகத், தன் அப்பாவிடம், கூறியதாவது. “வாழ்ந்தால் நான் அவரோடுதான் வாழ்வேன், என் கணவரை என்னைவிட்டு பிரித்து விடாதீர்கள்” என்று கெஞ்சி அழுதார். ஆனால் பொலிசாரும், பெற்றோரும் இந்த பொருந்தாத காதல் வேண்டாம் என்று அறிவுறுத்தியும் மகத் கேட்கவே இல்லை. அதனால் ஜெய்கிருஷ்ணனிடம் பேசிப் பார்த்தனர். அவரும் மகத்தை விட்டு பிரியவே மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறார்.ஒரே செல்ல மகள்மகத்தின் தந்தை ஒரு வங்கி அதிகாரி.
ஒரே பெண் வேறு. இதனால் செல்லத்தை கொட்டி வளர்த்துள்ளார். அதனால்தான் அவரால் இன்னமும் மகளை இழக்க மனமில்லாமல் அழுது கொண்டே இருக்கிறார். ஆனால் பொலிசாரிடம் மகத் பேசும்போது, “எங்களை பஞ்சாப்புக்கு அனுப்பி விடாதீர்கள்,
என் காதல் தவறாக இருந்தாலும் நான் அவருடன்தான் வாழ்வேன். அவர் மீது அதிக பாசம் வைத்துவிட்டேன். நான் மேஜர் என்பதால் யாருடன் வாழ வேண்டும் என்ற முடிவை எடுக்கும் உரிமை எனக்கு இருக்கிறது” என்று அழுதவாறே கெஞ்சினார்.கோர்ட் கெடுஆனாலும் கோர்ட் கெடு விதித்துள்ளதால், அதனை சொல்லி இருவரையும் ராமேஸ்வரம் போலீசாரும், பஞ்சாப் போலீசாரும் அழைத்து சென்று இருக்கிறார்கள். இனி கோர்ட் உத்தரவு வந்தால்தான் இந்த விவகாரம் என்ன ஆகும் என தெரியும்.
0 comments:
Post a Comment