நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, September 29, 2018

மரணத்தில் முடிந்த முச்சக்கர வண்டி சாரதிகளின் வாக்குவாதம்..


தெஹிவளை கொஹூவல பிரதேசத்தில் முச்சக்கர வண்டி சாரதிகள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் நடத்த தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று முற்பகல் 10 மணியளவில் நடந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின்

   
       
   
  அலுவலகம் தெரிவித்துள்ளது.

நுகேகொடை பிரதேசத்தில் இருந்து கொஹூவல நோக்கி வந்த முச்சக்கர வண்டியின் சாரதி மற்றுமொரு முச்சக்கர வண்டியை முந்தி செயல்ல முயற்சித்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இரண்டு வண்டிகளின் சாரதிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த கல்கிஸ்சை பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான முச்சக்கர வண்டி சாரதி, களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

தாக்குதல் மேற்கொண்ட மற்றைய சாரதியை கொஹூவல பொலிஸார் கைதுசெய்துள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

   
       
   
 

0 comments:

Post a Comment