இந்தியாவின் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பாராளுமன்ற
உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கிய நேர்காணலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைவர் பிரபாகரனுக்குப் பணம் வழங்கியதாகவும் தான் அது தொடர்பில் நன்கு அறிந்திருந்ததாகவும் கூறியிருந்தார். அவ்வாறெனில் ....
01.இலங்கையில் பயங்கரவாத அமைப்பு ஒன்றிற்கு அதன் வளர்ச்சிக்காக பெருந்தொகையான பணத்தை வழங்கியதன் மூலம் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு உதவியமை குற்றமில்லையா? ????
02.விடுதலைப்புலிகளுக்கு சமைத்தவருக்கு எதிராக பத்து வழக்கு போட முடிந்தால் அரிசி வாங்க காசு கொடுத்தவருக்கு எத்தனை வழக்குப் போடலாம்? ???
03.நானே அமைச்சரவையில் அந்த அரசில் அங்கம் வகித்தேன் அதனால் எனக்கு அவ்விடயம் தெரியும் எனக் கூறும் முன்னாள் அமைச்சர் பயங்கரவாதக் குற்றச் செயல் ஒன்றுக்கு உடந்தையாக இருந்தமை.பொலீசாருக்கு முறையிடத் தவறியமை.உள்நாட்டு விவகாரம் ஒன்றை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு வெளிநாட்டில் போய் போட்டுடைத்ததன் மூலம் நாட்டின் இறைமைக்கு குந்தகம் விளைவித்தமை.மற்றும் பாதுகாப்பு இரகசியங்களை வெளியிட்டமை (இந்தச் சட்டத்தின் கீழேயே சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார்)
போன்றவை குற்றமில்லையா? ????
நாட்டில் சட்டமும் நீதித்துறையும் போலீஸ் மற்றும் பயங்கரவாதத் தடுப்பும் பிரிவும் அனைவருக்கும் சமமானதென்றால் கைது செய்து அரசியல் கைதிகளோடு சிறையிடுங்கள் பார்க்கலாம்? ????
க.பண்பரசன் காண்டீபன் அவர்களின் முகநூல்ப திவிலிருந்து...
0 comments:
Post a Comment