நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, September 24, 2018

பதவியிலிருந்து விலகுமாறு பணித்தனர் - விலகுகிறேன் ! தகுதியற்றவன் என்றால் ஓய்வை அறிவிக்கவும் தயார் - மெத்தியூஸின் உருக்கமான கடிதம் !


இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு மற்றும் தலைமைப் பயிற்றுவிப்பாளர் என்னை அணித் தலைமைப் பதவியிலிருந்து விலகுமாறு தெரிவித்தனர். அதனால் தலைமைப் பதவியில் இருந்து விலகுகிறேன். அவர்கள் என்னை அணியிலிருக்க தகுதியற்றவன் என்றால் ஓய்வை அறிவிக்கவும் தயாராகவுள்ளேன் என இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் இலங்கை ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது அணிகளின் தலைமை பொறுப்பில் இருந்து நேற்று விலகியுள்ள நிலையில், இது
   
       
   
  தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு உருக்கமான கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடித்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
அவர் அனுப்பி வைத்துள்ள கடிதம் வருமாறு,
கடந்த வௌ்ளிக்கிழமை 21 ஆம் திகதி இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தையின் போது இலங்கை அணியின் தேர்வு குழுவின் தலைவர் மற்றும் தலைமை பயிற்சியாளர் ஹத்துரு சிங்க ஆகியோர் என்னை ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 அணிகளின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு அறிவித்ததனர். என்னை பதவியிலிருந்து விலகுமாறு தெரிவித்ததும் நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். 
மேலும் , ஆசிய கிண்ணத் தொடரில் இலங்கை அணி சந்திந்த படுதோல்வியின் முழுப்பொறுப்பும் என் மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும் தோல்விக்கு தானே பலிக்கடாவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் , அணியின் தோல்விக்கு அணியின் தலைவரே முழுப்பொறுப்பும் என்று தெரிவிப்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்த தோல்வியின் ஒரு பங்காளியே நான் என்றும் , அதன் முழுப்பொறுப்பையும் தன்னால் ஏற்க முடியாது எனவும் அஞ்சலோ குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தெரிவுக்குழு மற்றும் பயிறிசியாளரின் முடிவை நான் முழு மனதுடன் ஏற்றுக்கொள்கின்றேன்.
நான் தலைமைப்பொறுப்பில் இருக்கும் போது இலங்கை அணி பல சவால்களை எதிர்கொண்டு சாதனைகளைப் படைத்தது. அதில் அவுஸ்திரேலிய அணியை 3-0 என வெள்ளையடிப்புச்செய்தது. இதைவிட இங்கிலாந்து அணியை வெற்றிபெற்று சாதனை படைத்தது.
எவ்வாறாயினும் இலங்கை அணிக்கு புதிய தலைமைத்துவம் வேண்டுமென உணரப்பட்டவேளையில் நான் அனைத்து வகை கிரிக்கெட்டிலுமிருந்து கடந்த 2017 ஜூலை மாதம் சுயவிருப்பின் அடிப்படையில் அணித் தலைமையில் இருந்து விலகியிருந்தேன்.
இவ்வாறு நான் விலகிய காலப்பகுதியில் உபுல் தரங்க, திஸர பெரேரா, சாமர கப்புகெதர, லசித் மாலிங்க மற்றும் டினேஸ் சந்திமல் ஆகியோர் 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளில் மாறிமாறி அணிக்கு தலைமை தாங்கினர்.
இந்நிலையில் அணி தொடர் தோல்விகளை சந்தித்தபேது இலங்கை அணிக்கு புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட சந்திக்க ஹத்துருசிங்க என்னை தனிப்பட்ட முறையில் சந்தித்து எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு உலக்கிண்ணம் வரை அணித் தலைமைப்பொறுப்பை ஏற்குமாறு கேட்டுக்கொண்டார்.
தலைமைப்பெறுப்பை மீண்டும் எடுப்பதற்கு எனது குடும்பத்தினரும் நண்பர்களும் எதிர்ப்பைத் தெரிவித்த நிலையிலும் ஹந்துருசிங்க மீதும் அவரது திட்டத்தின் மீதும் வைத்த நம்பிக்கையினால் நான் அந்தப்பொறுப்பை மீண்டும் எடுத்து அணியை பலப்படுத்தி உயர்ந்த நிலைக்கு  இட்டுச்செல்ல இணங்கினேன்.
இந்தப் பிரச்சினையில் இருந்து விலகிவிடுவது எனது நோக்கமல்ல. விளையாட்டு வீரன் என்ற ரீதியில் நான் முழு மனதுடன் எவ்வேளையிலும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி செயற்படுவேன்.


இதேவேளை, நான் எந்தவேளையிலும் அணிக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. தேர்வுக்குழுவோ தலைமைப் பயிற்சியாளரோ நான் அணிக்கு தகுதியற்றவன் என்று தெரிவிக்கும் பட்சத்தில் நான் ஓய்வுபெறவும் தயாராகவுள்ளேன் என அவரது கடிதத்தில் மெத்தியூஸ் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job