இலங்கை வறுமையால் பாதிக்கப்பவதற்கான அபாயம் காணப்படுபதாக கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கும் உலக வங்கி அதனை தடுப்பதற்கான போதுமான நடவடிக்கைகள் இலங்கையால் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும்
தெரிவித்துள்ளது.
உலக வங்கியின், இலங்கையில் பொருத்தமான சமூகப் பாதுகாப்பு அனர்த்தங்கள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறளை கட்டியெழுப்புதல்,மாநாட்டில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே இலங்கை மற்றும் மாலைதீவிற்கான உலக வங்கியின் வதிவி திட பணிப்பாளர் ஐடா ஸ்வராய் சிடி றொப் இவ்வாறு குறிப்பிட்டார்.
நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற
இலங்கை அதன் வருமானம் மற்றும் அபிவிருத்தி காரணமாக பல உலக நாடுகளின் பொறாமைக்குரியதாக காணப்படுகின்றது.
இலங்கை வறுமையை ஒரு வீதத்தினால் குறைத்துள்ளது. அதன் தற்போதைய தேசிய வறுமை மட்டம் 4.1 ஆக காணப்படுகின்றது.இலங்கையின் முக்கிய அக்கறைக்குரியவிடயம் வறுமை யல்ல மாறாக பலவித ஆபத்துக்களினால் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளமையே இலங்கையின் முக்கிய கவலையாகும்.
பாதிப்புகளின் அளவை பொறுத்துபதை உறுதி செய்வதற்கும் மேலும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம், இந்த விடயத்திலேயே தகவமைப்பு சமூக பாதுகாப்பு முக்கிய பங்களிப்பை வழங்கலாம், தகவமைப்பு சமூக பாதுகாப்பு என்பது மழைகளையும் பாதிக்கப்படக்கூடியவர்களையும் பேரிடர்களில் இருந்து பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை உள்ளடக்கியுள்ளன.
ஒரு சமுகமாக மேலும் எதிர்ப்பாற்றல் உள்ளவர்களாக மாறுவதற்கான நடவடிக்கைகள் இவை.தகவமைப்பு சமூக பாதுகாப்பு என்பது வெறுமனே பணத்துடன் தொடர்புபட்டது மாத்திரமில்லை,மாறான பணப்பரிமாற்றம், ஓய்வூதியங்கள், மாற்றுதிறனாளிகளுகான நன்மைகள்,துடிப்பான தொழில் சந்தைகள் போன்ற சமூக 2.தவி மற்றும் சேவைகளையும்கொண்டுள்ளது.
இந்த திட்டங்களை சிறப்பாக வடிவமைத்து முன்னெடுத்தால் அவற்றால் பேரிடர்களால் ஏற்படும் எதிர்பாராத இழப்புகளை எதிர்கொள்ளும் திறனை வழங்கமுடியும், உதவிகள் தேவையாகவுள்ளவர்களிற்கு அரசாங்கத்தின் உதவிகள் கிடைக்கச்செய்வதில் அவற்றை ஒழுங்குபடுத்துவதில் தகவல் அமைப்பு முறைகள் சர்வதேச அளவில் முக்கிய பங்களிப்பை வழங்கிவருகின்றன, உலக வங்கியின் உதவியுடன் இலங்கை மக்களின் தேவைகள் மற்றும் நிலைமைகளை உள்ளடக்கிய தரவுகளை கொண்ட
இலங்கை உண்மையான தகவமைப்பு சமூக பாதுகாப்பு திட்டத்தை வடிவமைத்து நடைமுறைப்படுத்துவதன் மூலம் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு இந்தவிடயத் தில் ஏனைய நாடுகளிற்கு தலைமை தாங்கும் என்பது எங்களது பெரும் நம்பிக்கையாகும்.
0 comments:
Post a Comment