மர்மமான முறையில் மரணடைந்த கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளர் போதநாயகியின் கணவர் கவிஞர் செந்தூரன் மனைவியின் சடலம் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று அழுது குளறியுள்ளார் .செந்தூரன் மனைவியின் இறுதி சடங்கிற்கு கூட செல்லவில்லை என்பது போதநாயகியின் கொலைக்கான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது .
போதநாயகியின் கணவர் செந்தூரன் என்ற நபர், தான் ஸ்திரீ லோலனாக இருந்தாலும், மனைவி தனக்கு
கீழ்ப்படிந்திருக்க வேண்டுமென்ற சிந்தனை வன்முறைக்குள்ளாக்கியிருக்கிறார், கடந்த சில வருடங்களில் அவரது வாழ்வில் பல பெண்கள் தொடர்புபட்டுள்ளார்கள் என்ற பரபரப்பு குற்றச்சாட்டுக்கள் வெளியாகி வருகின்றன.
பிரான்சை சேர்ந்த தன்னிலும் வயது கூடிய ஒரு பெண்மணியை திருமணம் செய்து, செந்தூரனின் திருவிளையாடல்கள் தெரிந்ததும் மூன்றாவது நாளிலேயே விவாகரத்து செய்து விட்டார். அதை அவர் பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.
இதன்பின்னர், பிரத்தானியாவை சேர்ந்த ஒரு யுவதிக்கு ஆட்டையை போட்டு, அவரது தாயாரிடமிருந்து பெருமளவு பணத்தை சுருட்டிக் கொண்டிருக்கிறார், இதற்கிடையில் இந்தியாவில் ஒரு தொடர்பு. இதன்பின் கிளிநொச்சி யுவதியொருவருடன் திருகோணமலையில் உல்லாசம் என பல பேஸ்புக் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதைப்பற்றி செந்தூரன் தரப்பிலிருந்து எந்த பதிலுமில்லை. மாறாக, சில பெண்கள்- முகப்புத்தகத்தில் நேரில், கொஞ்சம் பட்டும்படாமலும் செந்தூரன் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை சுமத்த ஆரம்பித்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கும் விதத்தில் உள்ளது. அது கமல் பாடும் பாடலை நினைவுபடுத்துகிறது. செந்தூரன் தரப்பு இதைப்பற்றி பகிரங்கமாக சொன்னால் மாத்திரமே உண்மை தெரியவரும்.
உயிரிழந்த போதநாயகி நல்ல சம்பளத்தை பெறும் விரிவுரையாளராக கடமையாற்றினார். அவரது ஏடிஎம் கார்ட் கூட செந்தூரனிடமே இருந்துள்ளது. போதநாயகியின் இறுதி மாத சம்பளம் -ஒரு இலட்சம் ரூபா- உயிரிழப்பதற்கு சில நாள் முன்னதாக வங்கி கணக்கிற்கு சென்றது. இறுதி சடங்கிற்கு பணமில்லையென போதநாயகியின் குடும்பத்தினர் கூற, ஏடிஎம் கார்ட் பின் நம்பர் தெரியாதென அலட்சியமாக செந்தூரன் பதிலளித்துள்ளார். அதை போதநாயகியின் குடும்பத்தினரே தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பிரேத பரிசோதனை முடிந்ததும், கணவனாக அவரே சடலத்தை பொறுப்பேற்க முடியும் சடலத்தை பொறுப்பேற்று தனது வீட்டுக்கு கொண்டு சென்று, சடலத்தின் மீது கவிதைப்புத்தகங்கள் என்ற பெயரில் தான் வெளியிட்ட புத்தகங்களையும், விருதுகளையும் பரப்பி படம் எடுத்து படம் காண்பித்தார்.
பின்னர் சடலம் வவுனியாவில், போதநாயகி வீட்டிற்கு கொண்டு செல்ல தயாரான போது செந்தூரன், தாயார் ஆகியோர் வீட்டிற்குள்ளேயே இருந்து விட்டனர். வவுனியாவில் மனைவி வீட்டிற்கு செல்லவுமில்லை, இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளவுமில்லை.
கட்டிய மனைவி தனியாக சவக்குழிக்கு செல்கிறாள் என்றபோதே, இந்த கணவனின் உண்மை முகத்தை புரிந்து கொள்ள முடியும் என்ற கருத்தும் பரவலாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
தம்பதியர்களிற்கிடையில் உறவு சுமுகமாக இல்லை, செந்தூரனின் நடவடிக்கைகளால் மனைவி அதிருப்தியடைந்திருந்தார் என்பதற்கு ஆதாரமாக அவரது முகநூல் பதிவுகளை சுட்டிக்காட்டுகிறார்கள்.
போதநாயகி வங்கியில் 20 இலட்சம் ரூபா கடன்பெற்று செந்தூரனிற்கு கார் ஒன்று வாங்கி கொடுத்துள்ளார். அது தவிர, அண்மையில் ஐந்து இலட்சம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பொதநாயகியின் தந்தை தும்புமிட்டாசு விற்றே மகளை கல்வி கற்க வைத்திருந்தார். மிக ஏழ்மை குடும்பமான அவர்களிடம் இறுதிச்சடங்கிற்கே பணமிருக்கவில்லை. இறுதியில் வவுனியாவை சேர்ந்த தன்னார்வலர்கள் பணம் திரட்டியே அவரது இறுதிச்சடங்கை நடத்தி முடித்திருந்தனர்.
சில காலத்தின் முன்னர்வரை ஊர், பேர் அறியாமல் இருந்த செந்தூரன், ஐ.பி.சி நிறுவனத்தின் நிகழ்ச்சிகளின் மூலம் புகழடைந்தார். ஐபிசி உரிமையாளரின் நண்பனான செந்தூரன், யாழ் ஐபிசி கலையக திறப்பு விழாவில் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறுகிய காலத்தில் புகழடைந்த செந்தூரன், மிக குறுகிய காலத்தில் அதிர்ச்சி குற்றச்சாட்டுக்களிற்கு உள்ளாகியுள்ளார்.
இதேவேளை நேற்று செந்தூரனின் நண்பன் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் செந்தூரன், மனைவியின் உடல்புதைக்கப்பட்ட இடம் என கருதப்படும் இடத்தில், அழுது கொண்டிருப்பதை போல காண்பிக்கும் காட்சிகள் உள்ளன. இந்த காட்சிகள் தொடர்பிலும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் கிளம்பியுள்ளது. உண்மையான கணவன் எனில் இறுதிச்சடங்கிற்கு சென்றிருக்க வேண்டும், இது அனுதாபம் தேடும் முயற்சியென நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
ஆனால் செந்தூரனின் நண்பர்கள், “அண்ணன் அப்செட்டில் இருக்கிறார். ஏற்கனவே உடைந்து போயிருப்பவரை இந்த விமர்சனங்கள் மேலும் காயமடைய வைக்கிறது. சிறிய அவகாசம் அவருக்கு தேவை. விரைவில் பகிரங்கமாக அனைத்தையும் சொல்வார்“ என்கிறார்கள்.
“அண்ணன் ஏற்கனவே திருமணமானவரா? அது போதநாயகிக்கு தெரியுமா? அவர்களின் குடும்பத்தில் ஏதாவது சிக்கலிருந்ததா?“ என்று கேட்டால், “அதை அண்ணனிடமே கேளுங்கள்“ என்கிறார்கள்.
எதுஎப்படியோ இந்த விவகாரத்தில் செந்தூரன் தரப்பும் ஏதாவது அபிப்பிராயத்தையும், நியாயத்தையும் வைத்திருக்ககூடும். அவர்கள் இதுவரை பகிரங்கமாக அதை பதிவுசெய்யவில்லை. பொலிசார் நியாயமான விசாரணை நடத்தி, உண்மையான காரணத்தையும், குற்றவாளியையும் கண்டறிந்தால் மட்டுமே முழு உண்மையும் பகிரங்கமாகும்.
0 comments:
Post a Comment