மாட்டுத் தொழுவமொன்றில் காணப்பட்ட மாட்டுச் சாணம் திடீரென்று
உண்மையில் மாட்டுச் சாணம் பாம்பாக மாறியதா என்பது தொடர்பில் குறித்த விவசாயியிடம் நாம் வினவினோம். அதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,
“காலையில் வன்னிக்குச் செல்வதற்காக வழமையைவிட நேரத்திற்கே எழுந்து மாட்டுக் கொட்டிலை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டேன். கங்கு மடையால் சாணத்தை அள்ளி எருக் கிடங்கில் போடுவது வழமை. இவ்வாறு ஒரு சாணக் குவியலை அள்ளியபோது அது திடீரென்று பாம்பாக நெளிவதைக் கண்டு கீழே போட்டுவிட்டேன். நல்ல நேரம் அந்த பாம்பு புடையன் இனத்தைச் சேர்ந்தது.
குறித்த பாம்பு சுருண்ட நிலையில் அசைவின்றிப் படுத்ததனாலும் அவசர அவசரமாக வேலை செய்ததனாலும் அதனை சரியாக இனங்காணமுடியாமற்போனதாக அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment