திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைகளின் தரத்தினைப்பற்றி நாங்கள் உங்களிடம் கூறவேண்டியதில்லை.
திருகோணமலை மாவட்டத்தில் மார்பு சம்மந்தப்பட்ட நோய்களான ஆஸ்துமா, கசம், நியூமோனியா போன்ற நோய்களால் பல பேர் பாதிக்கப்படுதோடு பல மரணங்களும் சம்பவித்துள்ளது.
திருகோணமலை வைத்தியசாலையில் மார்பு நோய் சிகிற்சைப்பிரிவு 1950 முன் கட்டப்பட்ட பழைய கட்டத்தில் பல நெருக்கடிக்கிடையல் நடந்து வருகிறது.
இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த அரசாங்கம் திருகோணமலை உட்துறைமுக வீதியில் கடற்படைத்தளத்திற்கு அருகில் 44.4 பேர்ச் காணி அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனைக் கட்டுவதற்காக மாகாணசபையின் சுகாதார அமைச்சினால் 120மில்லியன் பணம் ஒதுக்கப்பட்டு அதற்கான திட்ட வரைபு கோரப்பட்டது.
அதற்கான திட்டவரைபு மாவட்டம் சுகாதாரப்பணிப்பாளர் வைத்தியர் திருமதி. கயல்விழியினால் குறித்தகாலத்தில் சமர்ப்பிக்கப்படாமையினால் திருப்பி அனுப்பப்பட்டது.
மீண்டும் இதனைக் கட்டுவதற்காக சுகாதார அமைச்சர் திரு.ராஜிதவினால் 160மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டு மீண்டும் திட்டவரைபு கோரப்பட்டது.
மேலும் இது குறித்த காலத்திற்குள் திட்டவரைபு மீண்டும் திட்டவரைபு கொடுக்கப்படவில்லை என்பதால் மீண்டும் 160.1மில்லியன் ரூபாய் பணம் மீழப்பெறப்பட்டு தற்பொழுது அந்தப்பணம் திணைக்களங்களிற்கு வாகனம் வாங்குவதற்காக வளங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பல இடங்களில் மார்பு நோய் சிகிற்சைப்பிரிவுகள் உள்ளது அவற்றின் திட்டமாதிரிகளை சிறிது திருகோணமலைக்கு ஏற்றவாறு மாற்றம் செய்து சமர்பித்திருந்தால் இன்று திருகோணமலையில் மார்பு நோய் சிகிச்சைப்பிரிவு கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கும்.
இந்த மார்பு மருத்துவ முன்மொழிவு நியாயப்படுத்தலில் நீங்கள் திருகோணமலை மார்பு சிகிச்சை பிரிவிற்கு வருடத்தில் 134 நோயாளிகள்தான் வருகிறார்கள் என்று கூறியுள்ளீர்கள்,கிளினிக் பதிவேட்டின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 30நோயாளிகள் வருகிறார்கள்.
ஒரு முன்மொழிவு நியாயப்படுத்தல் கூட உங்களால் சரியாக எழுதமுடியவில்லை.
உங்களுக்கு ஒரு திட்டவரைபை எழுத்தெரியாவிட்டால் அதனை எழுதக்கூடிய மூளையுடைய பல வைத்தியர்கள் உள்ளார்கள் அவர்களிடம் ஆலோசனை பெற்றிருக்கலாம், அவர்களிடம் ஆலோசனை பெற உங்களுக்கு விருப்பமில்லாவிட்டால் எந்தவித தயக்கமின்றி எல்லாளன் உறுப்பினர் ஒருவரைத்தொடர்பு கொள்ளுங்கள்.
அவ்வாறு உங்களிற்கு மார்பு சிகிச்சைப்பிரிவு கட்டவிருப்பமில்லாவிட்டால் அந்த இடத்தை சுடுகாடாக்கிவிடுங்கள் அவ்விடத்தில் மார்பு நோயால் இறந்தவர்களை புதைத்து விடுவோம்.
0 comments:
Post a Comment