நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, September 5, 2018

கைவிடப்பட்ட காணியிலுள்ள கிணற்றை துப்பரவு செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

   
       
   
 


மன்னார் முருங்கன் கட்டுக்கரை கோர மோட்டை பகுதியில் யுத்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணியினை அதன் உரிமையாளர் துப்பரவு செய்துள்ள போது குறித்த காணியில் காணப்பட்ட கிணற்றில் ஆபத்தை விளைவிக்கும் வெடி பொருட்களை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குறித்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக முருங்கன் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டை தொடர்ந்து குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் மிகவும் ஆழமாக காணப்பட்ட குறித்த கிணற்றுக்கள் அதிகமான வெடி பொருட்கள் வெடிக்காத நிலையில் இருப்பதை அவதானித்துள்ளனர்.

குறித்த இடத்தில் பாதுகாப்பிற்கு மேலதிக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தியுள்ளதோடு, உடனடியாக குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கிணற்றினுள் உள்ள அனைத்து வெடி பொருட்களையும் மிகவும் பாதுகாப்பாக அகற்றி அவற்றை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் மன்னார் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

   
       
   
 


0 comments:

Post a Comment