இந்த கோவிலுக்கு ஒரு முறை சென்று வந்தாலே சகல வசதிகளையும் அருளும் தெய்வம் உங்களுக்கு அள்ளித் தருகிறாராம். தெருக்கோடியில் வசிப்பவர்களையும் கூட கோடீஸ்வரர்களாக ஆக்கி விட்டுள்ளார் இவர். இந்த கோவில் எங்குள்ளது, எப்படி செல்வது, செய்யவேண்டியவை, நடைதிறப்பு மற்றும் கோவிலின் சிறப்புகளைப் பற்றியும் இந்த பதிவில் காண்போம்.
சங்கரநாராயணரை வணங்கினால் வீடுகளில் பூச்சி, பல்லி, பாம்புத் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை. உக்கிரபாண்டிய மன்னர் 943 ஆண்டுகளுக்கு முன் இக்கோவிலை நிர்மாணித்ததாகத் தலவரலாறு கூறுகிறது. விரைவில் இந்த ஆலயம் 1000-வது ஆண்டை எட்டப்போகிறது. நடை திறந்திருக்கும் நேரம்
சங்கரன்கோவில் ஐம்பூத தலங்களில் முதல் தலம் ஆகும். இந்த கோவிலை மண் தலம் என்று அழைக்கிறார்கள். வாழ்வில் ஒருமுறையேனும் தரிசித்துப் பிறவிப் பயனை அடையவேண்டிய அற்புத திருத்தலம் இந்த சங்கரன் கோவில். மண்ணின் தலமாதலில் ரியல்எஸ்டேட் தொழில் செய்பவர்கள் பலர் இங்கு வந்து இறைவனை தரிசித்துச் செல்கின்றனர்
சங்கரன் கோவில் சங்கரன் கோவில் முகப்பில் நூற்றி இருபத்தைந்து அடி உயரமுள்ள ஒரு பெரிய கோபுரம் உள்ளது. இந்த கோபுரம் ஒன்பது நிலை கொண்ட கோபுரமாகும். கோபுரத்தின் உச்சி தென்வடக்காக 56 அடி நீளம், கீழமேல் அகலம் 15 அடி கொண்டது. உச்சியில் உள்ள குடம் 7 அடி நான்கு அங்குலம் உயரமாகும்.
சங்கரநாரயணர் சங்கரன் கோவிலில் சங்கரலிங்கர், கோமதியம்மை, சங்கரநாராயணர் என மூன்று சன்னதிகள் உள்ளது. கோவில் வாயிலில் சங்கரலிங்க பெருமான் சன்னதி உள்ளது. வடபகுதியில் கோமதியம்மையும், தென் பகுதியில் சங்கர நாராயணரும் உள்ளனர். சிவ பெருமானுக்கு சங்கரமூர்த்தி, வாராசைநாதன், வைத்தியநாதன், சீராசைநாதன், புன்னைவனநாதன், கூழையாண்டி ஆகிய பெயர்கள் உண்டு.
கோமதியம்மன் கோமதியம்மனுக்கு செவ்வரளிப் பூக்களைப் பரப்பி, அதன் மீது மாவிளக்கேற்றி வழிபடும் முறை சிறப்பாகக் கருதப்படுகிறது. அர்த்தஜாம பூஜை முடிந்த பின் தரப்படும் பிரசாதப்பாலை, தொடர்ந்து 30 நாட்கள் பருகினால் மகப்பேறு இல்லாதவருக்கு மகப்பேறு கிட்டும் என்கிறார்கள். ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமையிலும் கோமதியம்மனுக்கு தங்கப்பாவாடை சாத்தப்படுகிறது.
கோமதியின் மகிமை பெரிய பூஜைகள், ஹோமங்கள், வழிபாடுகள் நடத்த முடியாதவர்கள் கோமதி அம்மனின் பெயரை மனதார உச்சரித்து கொண்டிந்தாலே போதும், முழுமையான பலன்கள் கிடைக்கும். கோமதி அம்மனின் மகிமையை முழுமையாக உணர்ந்தவர்கள் இது வரை யாருமே இல்லை.
பேசும் தெய்வம் கோமதி சக்தி பீடங்கள் 108-ல் சங்கரன் கோவில் கோமதி அம்மனின் தலம் 8-வது பீடமாக கருதப்படுகிறது. சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் கோமதி அம்மனை "பேசும் தெய்வம்'' என்று சொல்கிறார்கள். சங்கரன்கோவில் தல வரலாற்றில் கோமதி அம்மனை "கூழை நாயகி''என்று குறிப்பிட்டுள்ளனர். கூழை என்றால் "வால் அறுந்த நாகம்'' என்று பொருள்
5 தீர்த்தங்கள் இந்தக்கோவிலில் ஐந்து தீர்த்தங்கள் உள்ளது.
நாகசுனை நாகசுனைக்கு மேலும் பல அற்புதங்கள் உண்டு. இந்த சுனையில் எப்பேற்பட்ட பாவங்கள் செய்தவர்களும் மூழ்கி எழுந்தால் நற்கதியடையலாம். கோவிலுக்கு பின் பக்கம் பாம்பாட்டி சித்தர் தவசாலை உள்ளது. அவர் இங்கு தான் அடங்கினார் என்றும் சொல்கிறார்கள்.
0 comments:
Post a Comment