என்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..!அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போது ஊரே திரண்டு விழா எடுத்தது.சொந்த பந்தமெல்லாம் ஒன்று திரண்டு எருமைக் கடா விருந்து ஏற்பாடு ..சுடச் சுட சாராயம் காய்ச்சி, இரவு முழுக்க அந்தப் பெண்ணின் கையால் பரிமாற வைத்து குடித்து உருண்டார்கள்.
அடுத்த நாள் காலை போதையில் மட்டையாகி கிடந்த ஒரு பையனை எழுப்பி.. அனைவரும் சேர்ந்து மாலை போட்டு அந்தப் பெண்ணுக்கு நீதான் பொருத்தமானவன் என்றார்கள்.அவனை தேர்ந்தெடுக்க காரணம் இரண்டு பானை சாராயத்தை ஒரே ஆளாகக் குடித்த பலசாலி. பரிமாறிய பெண் “இவன் தான் பலசாலி இவன் தான் எனக்கு கணவன்” என்று கூறி தேர்ந்தெடுத்து விட்டாள்.
அடுத்த வாரமே கல்யாணம் என்று கூறி முடிவெடுத்தார்கள். அந்த ஒரு வாரம் முழுக்க மணமகன் கிராமத்தில் இருக்க கூடாது.
அவர்களின் வழக்கப்படி சகோதரர்கள், நண்பர்களுடன் காட்டிற்கு வேட்டையாட செல்ல வேண்டும். ஆமாம் திருமணத்திற்கு வேண்டிய கடா விருந்துக்கு காட்டெருமைகளை அவன் தான் வேட்டையாட வேண்டும்.தடல்புடலா ஏற்பாடு ஊருக்கே விருந்து, எப்படியும் முப்பது, நாற்பது கடா வேண்டும். சாராயமும் காய்ச்ச வேண்டும். காலையில் விருந்து, அப்புறம் கல்யாணம். அன்று இரவுதான் சூப்பர் கிளைமாக்ஸ். ஊரே ஒன்று திரண்டு, மைதானம் என்று கூறப்படும் ஊருக்கு நடுவே உள்ள பஞ்சாயத்து திடலில் கூடி உட்கார்ந்து விடும்.
ஆண்கள், பெண்கள்,குழந்தை- குட்டி ,வயதானவர்கள், என ஜே ஜேவென கூட்டம் கூடி இருக்க நடுவே அலங்கரிக்கப்பட்ட கட்டில் மெத்தை, பால் பழம் இருக்கும். மணமகன், மணமகள், அங்கு அழைத்து வரப்படுவார்கள்.அனைவர் முன்னிலையிலும் சாந்தி முகூர்த்தம் நடக்கும். பெரியவர்கள் உன்னிப்பாகக் கவனிப்பார்கள்.எல்லாம் முடிந்து இருவரையும் ஒன்று சேர மஞ்சள்,
வேப்பிலை, துளசி கலந்த நீரால் குளிப்பாட்டுவார்கள்.
அப்படிக் குளிக்க வைத்தால் ஓ.கே, பெரியவர்களுக்கு இருவரும் சரியான ஜோடிகள் என்று அர்த்தம். பெண்ணை மட்டும் குளிக்க வைத்தால் அடுத்த நாள் காலை மீண்டும் எருமைக் கடா விருந்து வைத்து..தாலியை கழட்டிவிட்டு மணமகனை ‘ நீ அதுக்கு சரி வர மாட்டே’ என்று கூறி ஊரை விட்டு விலக்கி வைத்து விடுவார்கள்.
அதன் பின் மணமகன் அந்த ஊருக்குள் எட்டிப் பார்க்கக் கூடாது. பெண்ணுக்கு வேறு மாப்பிள்ளை பார்ப்பார்கள். இதெல்லாம் உண்மையா,எங்கே நடக்குது இந்த அக்கப்போர் என்று தானே கேட்கிறீர்கள். நாகாலாந்து மாநிலத்தில் உள்ள ஒரு இனத்தில் இன்றளவும் இந்த விநோதப் பழக்கம் இருப்பதாக கூறுகிறார்கள். என்னத்தை சொல்றது..!
0 comments:
Post a Comment