வடமாகாணசபையின் உறுப்பினர்கள் எட்டுப் பேர் மிக இரகசியமாக முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை சந்தித்து, அவரது கட்சியில் இணைவது தொடர்பாக பேச்சு நடத்தியுள்ளனர். இதில் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்ட நான்கு தமிழரசுக்கட்சியின் மாகாணசபை உறுப்பினர்களும் உள்ளடங்குகிறார்கள்.
கடந்த 31ம் திகதி தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் கந்தர்மடத்தில் இடம்பெற்றது. இதன்பின்னர் திருநெல்வேலியிலுள்ள வீடொன்றில் மிகமிக இரகசியமாக இந்த சந்திப்பு நடந்தது.
ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் கட்சிகளை சேர்ந்த தலா ஒவ்வொரு உறுப்பினர்களும், அடையாளத்தை தெரிவிக்க விரும்பாத இன்னொரு உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் நான்கு உறுப்பினர்களுமாக எட்டு மாகாணசபை உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
தமிழரசுக்கட்சியின் முக்கிய மாகாணசபை உறுப்பினர்களான அவர்கள் இதுவரை முதலமைச்சர் எதிர்ப்பு அணியில் அடையாளப்படுத்தப்பட்டு வந்தவர்கள். முதலமைச்சரை சந்திக்கவும், அவரின் அணியில் இணையவும்- முதலமைச்சர் அணியை சேர்ந்த மாகாணசபை உறுப்பினர் ஒருவர் ஊடாக நடத்திய பேச்சை தொடர்ந்தே இந்த சந்திப்பு நடந்தது.
அரசியல் சந்திப்புக்கள், பேச்சுக்கள் அண்மைக்காலத்தில் எப்படியோ ஊடகங்களில் கசிவதையடுத்து இந்த சந்திப்பு மிக மிக இரகசியமாக- தகவல் வெளியில் கசியாத விதத்தில் அமைய வேண்டுமென, தமிழரசுக்கட்சி தரப்பு மாகாணசபை உறுப்பினர்கள் ஒரேயொரு நிபந்தனை விதித்திருந்தனர். இதையடுத்து, திருநெல்வேலியிலுள்ள மருத்துவர் ஒருவரின் வீட்டை சந்திப்பிற்கு தமிழரசுக்கட்சி மாகாணசபை உறுப்பினர் ஒருவரே ஏற்பாடு செய்திருந்தார்.
முதலமைச்சரின் அணியில், கட்சியில் இணைந்து கொள்ள தயாராக இருப்பதாக தன்போது அவர்கள் முதலமைச்சரிடம் தெரிவித்தார்கள்.ஏற்கனவே முதலமைச்சரிற்கு ஆதரவாக நம்பிக்கை தீர்மானத்தில் கையொப்பமிட்ட மற்றைய நால்வரும்- தமது கட்சிகள் எப்படி தீர்மானமெடுத்தாலும் முதலமைச்சருடன் இணைய தயாராக இருப்பதாக தெரிவித்தார்கள்.
இதனபோது கருத்து தெரிவித்த முதலமைச்சர்-
இந்த சந்திப்பு அதிகபட்ச சினேகபூர்வமானதாக இருந்ததையும் அறிய முடிந்துள்ளது.
சந்திப்பை முடித்துக் கொண்டு முதலமைச்சர் முதலில் புறப்பட்டு சென்ற பின்னர், எட்டு மாகாணசபை உறுப்பினர்களிற்கும் அந்த மருத்துவரின் வீட்டிலேயே இரவு உணவு வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment