நல்லூர் உற்சவத்தை முன்னிட்டு, அந்த பகுதியில் சுற்றித்திரிந்த கட்டாக்காலி நாய்களை பிடித்து காக்கைதீவில் விடும்படி யாழ் மாநகரசபை முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இதன்படி முப்பதிற்கும் மேற்பட்ட நாய்கள் பிடிக்கப்பட்டு, காக்கைதீவில் விடப்பட்டன.
அந்த நாய்களால் அந்த பகுதி மக்களும், பிரயாணிகளும் பெரும் சௌகரியங்களை சந்திக்க தொடங்கியுள்ளனர். குடிமனைகளிற்குள் புகுந்து கால்நடைகளை கடித்து குதறுவது, வீதியால் பயணிப்பவர்களை கடிப்பது, விரட்டுவது, குப்பைகளை வீதிக்கு இழுத்து வருவதென பெரும் அட்டகாசம் செய்து வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் நாய்களால் காக்கைதீவில் பெரும் களேபரம் ஏற்பட்டு வருகிறது.
யாழ்
நேற்று முன்தினம் நடந்த சபை அமர்வில் இந்த விடயத்தை சபை உறுப்பினர் திருமதி செந்தினி தருமசீலன் சுட்டிக்காட்டினார். சபை உறுப்பினர்களும் இதை ஏகமனதாக ஆதரிக்க, யாழ் மாநகரசபையால் விடப்பட்ட கட்டாக்கால் நாய்களை அவர்களே பிடித்து செல்லும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
0 comments:
Post a Comment