“கொடிகாமம் பொலிஸாரின் வாகனத்தை எடுத்துச் சென்றவர் மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகிய நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். வாகனம் மீட்கப்பட்டுள்ளது”
என பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்மூலம் தென்மராட்சியை உலுக்கிய சில மணிநேர பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது.
இன்று (11) செவ்வாய்க்கிழமை மாலை பொலிஸ் ஜீப் ஒன்று கடத்தப்பட்டிருந்தது.
“வாகனத்தை வீதியில் நிறுத்திவிட்டு பொலிஸார் வீடு ஒன்றுக்குள் சென்றிருந்தனர். வாகனத்தின் திறப்பு கழற்றப்படவில்லை. அதனால் அந்தப் பகுதியால் வந்த ஒருவர் வாகனத்தை எடுத்துத் தப்பித்தார். பொலிஸார் வாகனத்தேடி நான்கு திசையும் தேடினர். கொடிகாமம் ஆலடிப் பகுதியில் மரமொன்றுடன் மோதி வாகனம் விபத்துக்குள்ளாகிய நிலையில் நின்றது.
அதனை எடுத்துச் சென்றவர் மதுபோதையிலிருந்தார்.
அவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். வாகனம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது” என்று பொலிஸார் மேலும் கூறினர்.
இதேவேளை, கொடிகாமம் பாலாவிப் பகுதியில் இடம்பெறும் மணல் கடத்தலைத் தடுக்கும் நோக்கில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை அதிலிருந்து திசை திருப்பும் நோக்கில் நன்கு திட்டமிடப்பட்டு வாகனம் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அங்குள்ள வீடொன்றிற்குள் வாள்வெட்டு கும்பல் புகுந்ததாக பொலிசாரை திசைதிருப்பும் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதை நம்பி பொலிசார் சென்ற நிலையிலேயே மண் கடத்தலும், பொலிசாரின் ஜீப் கடத்தலும் நடந்துள்ளது.
இந்த செய்தி தொடர்பான முந்தைய செய்தி
Breaking news!
கொடிகாமத்தில் ஆயுதங்களுடன் பொலிஸ் ஜீப் கடத்தல்!
https://newssle.blogspot.com/2018/09/breaking-news_11.html?m=1#morehttps://newssle.blogspot.com/2018/09/breaking-news_11.html?m=1#more
இந்த செய்தி தொடர்பான முந்தைய செய்தி
Breaking news!
கொடிகாமத்தில் ஆயுதங்களுடன் பொலிஸ் ஜீப் கடத்தல்!
https://newssle.blogspot.com/2018/09/breaking-news_11.html?m=1#morehttps://newssle.blogspot.com/2018/09/breaking-news_11.html?m=1#more
0 comments:
Post a Comment