‘ஹலோ… வீட்டில் சம்பவம் நடந்து விட்டது’; காதலியின் 14 வயது தங்கை வ ல்லுறவு: அவசர இலக்கத்துக்கு அறிவித்ததும் கிளிநொச்சி காதலனா?
கிளிநொச்சியில் 14 வயது சிறுமியொருவர், அவரது அக்காவின் காதலனால் பா லியல் வல்லு றவுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி- மலையாளபுரத்தை சேர்ந்த பாடசாலை மாணவியொருவரே வல்லு றவுக்குள்ளாக்கப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அவரை மருத்துவ பரிசோதனைக்காக பொலிசார் ஒப்படைத்துள்ளனர்.
அக்காவின் காதலனான 28 வயதான சந்தேகநபர் தலைமறைவாகி விட்டார். அவர் உருத்திரபுரத்தை சேர்ந்தவர்.
மலையாளபுரத்தை சேர்ந்த யுவதியொருவரை இந்த இளைஞன் காதலித்து வந்துள்ளார். யுவதியின் தந்தை சில வருடங்களின் முன்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தாயார் கொழும்பில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த வருட இறுதியிலும், இந்த வருட முற்பகுதியிலும் காதலியின் தங்கையான 14 வயது சிறுமியை, சந்தேகநபர் வல்லு றவுக்குள்ளாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் அக்காவிற்கு தெரிய வந்ததும், தனது காதலனுடன் தகராற்றில் ஈடுபட்டு, கிணற்றில் குதிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். இந்த சமயத்தில் சிறுவர், பெண்கள் பாதுகாப்பு அதிகாரசபையின் அவசர இலக்கமான 118ஐ தொடர்பு கொண்ட ஒருவர், மேற்படி சிறுமி வல்லு றவுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். காதலியுடனான தகராறையடுத்து, சந்தேகநபரே இந்த தொலைபேசி அழைப்பை மேற்கொண்டிருக்கலாமென பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த விவகாரம் கிளிநொச்சி பொலிசாரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, அந்த வீட்டுக்கு சென்ற பொலிசார் சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
0 comments:
Post a Comment