காலியில் (Galle ) மோட்டார் சைக்கிள் தொடருந்துடன் மோதியதில் மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (23) மாலை காலி - பூஸா, பிந்தலிய சந்தியில் உள்ள பாதுகாப்பு கடவையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடருந்து கடவையின் பாதுகாப்பற்ற சமிக்ஞை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பாதுகாப்பற்ற சமிக்ஞை
விபத்தில் உயிரிழந்த மூன்று இளைஞர்களும் 17 முதல் 19 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
3 Killed In Motorcycle Accident With Train
குறித்த கடவையில் உரிய முறையில் சமிக்ஞை செயற்படவில்லை என நேரில் பார்த்த பொது மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் மூன்று பேர் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
0 comments:
Post a Comment