ஆசிரியரின் தாக்குதலில் பலத்த காயமடைந்த மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை(polonnaruwa) கல்வி வலயத்திற்குட்பட்ட விஜித மகா வித்தியாலயத்தில் 10ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவி மீதே அக்கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று (20) முன்தினம் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து மாணவி புலஸ்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலையில் பலத்த காயம் காரணமாக
தலையில் பலத்த காயம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் நேற்று (21) அனுமதிக்கப்பட்டுள்ளதாக புலஸ்திகம காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் புலஸ்திகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment