நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, May 24, 2024

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர்களின் சடலங்கள் மீட்பு | Two Death Bodies Found In Paddy Field Tombe


மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர்களின் சடலங்கள் மீட்பு
Sri Lanka Police Crime Branch Criminal Investigation Department Crime Death

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இளைஞர்கள் இருவரின் சடலங்கள் வயல் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலங்கள் தொம்பே (Tombe) - மல்வான மாயிவல பிரதேசத்தில் மீட்க்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளர்.

உயிரிழந்தவர்கள் 18 மற்றும் 29 வயதுடைய ரம்பொட, நாவலதென்னவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவசர அழைப்பு பிரிவு

வயல்வெளியில் இரண்டு சடலங்கள் மிதப்பதாக 119 மற்றும் 118 அவசர அழைப்பு பிரிவுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளர்.

இவர்கள் இருவரும் கடந்த 22ம் திகதி தாம் தங்கியிருந்த விடுதியில் இருந்து வெளியேறி மீண்டும் திரும்பாததால், விடுதியில் தங்கியிருந்த ஒருவர் காவல்துறையினரிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பகுதியில் இரண்டு சடலங்கள் கிடப்பதனை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.

மரணத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து இன்னமும் தகவல்கள் வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பில் தொம்பே காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

0 comments:

Post a Comment