பிரிட்டனில்(uk) எவரும் எதிர்பார்க்காத வகையில் பொதுத்தேர்தலுக்கான நாளை அறிவித்து பிரதமர் ரிஷி சுனக்(Rishi Sunak) அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இதன்படி எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி வாக்கெடுப்புக்கான நாளாக அவர் அறிவித்துள்ளார்.
பல மாத ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி
அவரது ஆளும் கொன்சர்வேடிவ் கட்சி 14 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பின்னர் எதிர்க்கட்சியான தொழிற்கட்சியிடம் தோல்வியடையும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்கான திகதி எப்போது அறிவிக்கப்படும் என்ற பல மாத ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த சுனக், புதன்கிழமை தனது டவுனிங் ஸ்ட்ரீட் அலுவலகத்திற்கு வெளியே நின்று, சிலர் எதிர்பார்த்ததை விட முன்னதாகவே தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.
0 comments:
Post a Comment