பொலனறுவை பிரதேசத்தில் இராட்சத பருந்து ஒன்று , முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவரை தூக்கி செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குறித்த இராட்சத பருந்தால் பிரதேச மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மிகவும் அச்சத்தில் பிரதேச மக்கள்
முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை திடீரென் பருத்து வந்து துக்கி செல்ல முயன்றபோது அதனை கண்ட தந்தை கூக்குரலிட்டதை அடுத்து பருந்து சிறுவனை பொட்டு விட்டு சென்றுள்ளது.
இந்நிலையில் பருந்து தூக்கியதால் காயமடைந்த சிறுவன் பொலனறுவை மருத்துவமனையில் சிகிற்சை பெற்று வீடுதிரும்பியுள்ளார்.
எனினும் சிறுவன் இன்னும் அச்சத்தில் இருந்து மீளவில்லை என பெற்ரோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த பருந்தை விரட்ட வனஜீவராசிகள் திணைக்கள்த்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச வாசிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
0 comments:
Post a Comment