யாத்திரை சென்று கொண்டிருந்த வான் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
கல்கமுவ, மீஓயாவிற்கு அருகில் இன்று (26) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வான் சாரதிக்கு நித்திரை மயக்கம்
பாதெனியவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த வான் சாரதிக்கு நித்திரை மயக்கம் ஏற்பட்டு மீஓயா பாலத்தில் மோதி வீதியை விட்டு விலகி மீண்டும் மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
The Pilgrimage Ends In A Fatal Accident
விபத்தின் போது வானில் சுமார் 15 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், விபத்தில் காயமடைந்த 13 பேர் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர் எம்பிலிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடையவர்.
அனுராதபுரம் வைத்தியசாலையில்
காயமடைந்து கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 07 பேர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கமுவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment