வெசாக் பௌர்ணமி தினமான இன்று (23) காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (PNB) அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில்(bandaranaike international airport) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் துபாய் மற்றும் இந்தியாவிலிருந்து திரும்பிய ஆண் மற்றும் பெண் இருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து 5.1 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நிறுத்தப்பட்டகாவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின்( PNB) அதிகாரிகள், இந்தியாவில் இருந்து திரும்பி வந்த சந்தேகத்திற்கிடமான பெண்ணை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இந்தியாவில் இருந்து வந்த பெண்ணை
சிறி லங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL174 இல் பெங்களூரில்(Bangalore )இருந்து அதிகாலை 5.00 மணியளவில் நாட்டை வந்தடைந்த குறித்த பெண் பயணி சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
A Man And A Woman Landed In Katunayake Arrested
இதன்போது இலங்கையில் விற்பனை மற்றும் நுகர்வுக்கு தடைசெய்யப்பட்ட 86 அட்டைப்பெட்டிகளில் 17,200 சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரு சிகரெட்டின் மதிப்பு ரூ.100 என்பதுடன் இதன் மொத்த மதிப்பு ரூ. 1,720,000.ஆகும்.
48 வயதான இந்த பெண் பயணி சிலாபத்தை வசிப்பிடமாகவும், இந்தியாவில் இருந்து இங்கு விற்பனை செய்வதற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வழக்கமான பயணி எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
டுபாயில் இருந்து திரும்பிய தொழிலதிபர்
இதற்கிடையில், சிறி லங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL 226 இல் டுபாயில்(dubai) இருந்து திரும்பிய தொழிலதிபர் என்று தன்னை அடையாளப்படுத்திய ஒருவர் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் அவரிடமிருந்து ரூ3,440,000 பெறுமதியான சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டார்.
இன்று அதிகாலை 5.15 மணியளவில் தரையிறங்கிய மோதர பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய வர்த்தகர் என அடையாளம் காணப்பட்ட குறித்த பயணியை, சந்தேகத்தின் பேரில் சோதனையிட்ட போது, அவரிடமிருந்த இரண்டு வகையான இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள், 24, 600 சிகரெட்டுகள் அடங்கிய 123 அட்டைப்பெட்டிகள் மற்றும் 9,800 சிகரெட்டுகள் அடங்கிய மற்றொரு பிராண்டின் 49 அட்டைப்பெட்டிகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர்.
கடத்தப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.3,400,000. இரண்டு பயணிகளும் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டனர் மற்றும் மே 29 அன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டது.
கைப்பற்றப்பட்ட மொத்த சிகரெட்டுகளின் மொத்த மதிப்பு ரூ. 5,100,000 ஆகும்.அதே நாளில் அவை நீதிமன்றங்களில் முற்படுத்தப்படும்.
0 comments:
Post a Comment