இந்தியா(India) - குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 4 பேரை குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன.
குறித்த 4 பேரும், இலங்கையர்கள் என்றும் இஸ்லாமிய அரசுடன் தொடர்புடையவர்கள் என்றும் குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதல் கட்ட விசாரணை
இந்தநிலையில் அவர்கள் அகமதாபாத்திற்கு வந்த நோக்கத்தை கண்டறியும் வகையில் முதல் கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அவர்கள் இலங்கையில் இருந்து சென்னை வழியாக அகமதாபாத் சென்றதாக தெரியவந்துள்ளது.
மேலும், திட்டமிட்ட இலக்கை அடைவதற்கு முன்பே குஜராத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் சந்தேகநபர்கள் பாகிஸ்தானில் உள்ள தங்களின் உத்தரவுக்காக காத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 comments:
Post a Comment