யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் ஒன்றில் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் ஈடுபட்டதுடன் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொல்புரம் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இளைஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வாள்வெட்டில் முடிந்துள்ளது.
இதில் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , தனிப்பட்ட முரண்பாடே வாள் வெட்டு சம்பவத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment