யாழ்ப்பாணத்தில் பாண் ஒன்றுக்குள் கண்ணாடி துண்டுகள் காணப்பட்டமையை அடுத்து, பொது சுகாதார பரிசோதகரிடம் முறையிடப்பட்டுள்ள நிலையில் , சுகாதார பரிசோதகர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மருதனார்மடம் பகுதியில் உள்ள கடையொன்றில் நேற்றைய தினம் ஒருவர் பாண் வாங்கியுள்ளார். அதனை வீட்டில் சாப்பிட முனைந்த போது , பாணினுள் இருந்து உடைந்த போத்தல் கண்ணாடி துண்டுகள் காணப்பட்டுள்ளன.
அது தொடர்பில் அப்பகுதி சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை , அடுத்து அவர் முன்னெடுத்த விசாரணைகளில் கடைக்கு பாண் விநியோகம் செய்தது , சுன்னாகம் பகுதியில் உள்ள பிரபல வெதுப்பகம் என தெரிய வந்துள்ளது.
அதனை அடுத்து குறித்த வெதுப்பகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொது சுகாதார பரிசோதகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment