கனடாவில் (Canada) சில சந்தேக நபர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை வி்டுக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கையை ஒன்றாரியோ (Ontario) மாகாண காவல்துறையினர் விடுத்துள்ளனர்.
மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் தெரியவருகையில், ஆயுத முனையில் வீடொன்றிற்குள் புகுந்து கொள்ளையிட்டதாக ஐந்து சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
சந்தேக நபர்கள்
எனினும் சந்தேக நபர்கள் பாரியளவில் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Police Alert For Some Suspects In Ontario Canada
இந்த சம்பவம் கடந்த ஆண்டில் இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இதனையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது 37 பாரிய குற்றச் செயல்களுடன் இந்த நபர்கள் தொடர்புபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
Police Alert For Some Suspects In Ontario Canada
எனவே சந்தேக நபர்கள் மேலும் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்பது குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் அவர்களின் புகைப்படங்களை வெளியிடுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment