யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் பிறந்தநாளில் இராணுவ வாகனம் மோதி யுவதி ஒருவர் இன்று (20) உயிரிழந்துள்ளார்.
வாதரவத்தையைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா என்ற 23 வயதான யுவதியே உயிரிழந்துள்ளார்.
புத்துர் – மீசாலை வீதியில் வீரவாணி சந்தியில் இந்த விபத்து நிகழ்ந்தது.
யுவதி உறவினர் வீட்டில் பால் கொடுத்து விட்டு வீடு திரும்பும் போது, வீரவாணி சந்தியில், வீதியை கடப்பதற்காக வீதியோரம் நின்றுள்ளார்.
இதன்போது, யுவதி நின்ற கரைக்கு மறுகரையாக- எதிர்திசையில் இருந்து புத்தூர் சந்தியிலிருந்துஇராணுவ வாகனம் வந்தது. வீதியின் இடது கரையில் சென்ற இந்த வாகனம் வீதியின் வலதுகரையில் நின்ற யுவதியை மோதி, மரத்திலும் மோதி கவிழ்ந்தது.
விபத்தில் காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே யுவதி உயிரிழந்துள்ளார்.
யுவதியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துச் சம்பவம் தொடர்பாக இராணுவத்தினரிடம் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment