இலங்கையை (srilanka) சூழவுள்ள கடல் பிரதேசத்தில் கடும் சீற்றம் காணப்படுமென சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளிலுள்ள கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் மிகவும் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (23.5.2024) வெளியிட்டுள்ள அறிவித்தலில் இதனைக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் புயல்
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, இன்று (25) அதிகாலை 5.30 மணிக்கு வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து மத்திய வங்கக்கடலில் புயலாக உருவாகலாமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
Sri Lanka Bad Eavy Weather Warnings Today
அதனைத் தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து இன்று இரவு 11.30 மணியளவில் இந்த புயல் மேலும் வலுவடையுமென திணைக்களம் குறிப்பிடுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் மிகவும் பலத்த காற்று மற்றும் பலத்த மழை பெய்யுமென திணைக்களம் தெரிவிக்கின்றது.
வெள்ள அபாய எச்சரிக்கை
நாட்டின ஏனைய பகுதிகளில் அவ்வப்போது காற்று 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, களு கங்கை, அத்தனகலு ஓயா மற்றும் சில இடங்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
20 ஆம் திகதி வெளியிடப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு இன்று இரவு 9 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு குறித்த பிரதேச மக்களுக்கு தெரிவிக்கப்படுவதுடன், அவ்வழியாக செல்லும் வாகன சாரதிகளும் அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment